Wednesday, June 23, 2010

விஜய் - சீமான் படம் உறுதி

விஜய் - சீமான் இருவரும் இணைந்து படம் செய்வார்கள் என்ற கதை நீண்ட காலமாகவே அடிபட்டு வந்தாலும் விஜய் தொடர்ச்சியாக வேறு இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகின்றார். தற்போது 'காவல்காரன்" படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்தாக 'வேலாயுதம்" படத்தில் நடிப்பார் என்ற அறிவிப்புக்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 'த்ரீ இடியட்ஸ்" படத்தில் நடிப்பார் என்ற கதையும் இருந்து வருகின்றது. இந்நிலையில் சீமான், விஜயின் படத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.


தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்த சீமான், அண்மையில் தனியாக கட்சி ஒன்றையும் ஆரம்பித்திருந்தார். ஆனாலும் அவ்வப்போது சினிமா நிகழ்வுகளிலும் தலை காட்டி வந்தார். இறுதியாக 2008ஆம் ஆண்டு மாதவன் - பாவனா இருவரையும் வைத்து 'வாழ்த்துக்கள்" என்ற படத்தை இயக்கியிருந்தார். பின்னர் இடையே ஒரு சில திரைப்படங்களிலும் தலை காட்டியிருந்தார். அரசியலில் அதி தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் சினிமா மீது கொண்ட பற்று அவரை விட்டு என்றுமே நீங்கியதில்லை.


இந்த நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் படமொன்றை இயக்க தயாராகின்றார். படத்திற்கான தலைப்பாக 'கோபம்" எனப் பெயரிட்டிருக்கிறார்களென தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்படத்தில் நாயகனாக விஜய் நடிக்க இருக்கின்றார். மிகவும் ஆக்ரோஷம் மிக்க ஒரு இளைஞனின் வாழ்க்கையை தனக்கே உரித்தான பாணியில் தரக் காத்திருக்கின்றார் சீமான். (ஏற்கனவே தம்பி படமும் அவ்வாறான ஒரு இளைஞனின் கதையே!) நிச்சயம் இந்தக் கதை இளைஞர்களை பாதிக்கும் என்ற நம்பிக்கையில் சீமான் களமிறங்கியுள்ளார். இந்த பிரவேசம் சீமானின் அரசியல் வாழ்க்கைக்கோ, அல்லது விஜயின் (தந்தையின்) அரசியல் வாழ்க்கைக்கோ உறுதுணையாகவும் அமையக் கூடும்.

இந்த செய்தியை அண்மையில் சீமான் உறுதி செய்துள்ளார். படத்தை வி.கிரியேஷனல் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்க்கு சச்சின் படத்தையும் தயாரித்தவர். செழியன் ஒளிப்பதிவு இயக்குனராக கடமையாற்றவுள்ளார்.

விஜய் 37வது பிறந்த நாள் : கல்வி உதவி வழங்கி கொண்டாட்டம்

22/06/2010 தனது 37வது பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய். ஆண்டுதோறும் தனது பிறந்தநாளில் சமூக பணிகள் செய்ய வேண்டும்.

நகரம் முதல் குக்கிராமம் வரை மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று தன் ரசிகர்களுக்குக் கூறி வரும் விஜய், ஏராளமான ஏழைகளுக்கு இன்று தன் கையால் உதவிகள் வழங்கினார்.

குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு அதிக கல்வி உதவிகளை அவர் வழங்கினார்.

பிறந்தநாளையொட்டி இன்று சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் விஜய். காலை 9 மணிக்கு பாலவாக்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் விஜய் முன்னிலையில் ரசிகர்கள் நூறு பேர் ரத்ததானம் வழங்கினர்.

காலை 9.30 மணிக்கு திருவான்மியூர் தியாகராஜர் தியேட்டர் எதிரிலுள்ள முத்துலட்சுமி மருத்துவமனையில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார்.

காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே ஊள்ள நகராட்சி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார்.

காலை 11 மணிக்கு சாலிகிராமம் ஷோபா திருமண மண்டபத்தில் அனாதை இல்லத்திற்கு சீருடைகள் வழங்கினார்.

ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவருக்கு பி.ஈ.வரை படிப்பதற்கான அனைத்து உதவிகளையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

கம்ப்யூட்டர் கல்வியில் தேர்ச்சி பெற்ற 37 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். உறுப்பு தானம் வழங்கிய 37 பேருக்கு சான்றிதழ்களும், 37 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கினார்.

விஜய் தலைமை நற்பணி இயக்க அலுவலக வாசலில் நடந்த அன்னதானம், மதியம் 12 மணிக்கு சாலிகிராமம் காவேரி பள்ளியில் நடந்த அன்னதானம், மதியம் 12.30 மணிக்கு சின்மயா நகர் முதியோர் இல்லத்தில் நடந்த அன்னதானம் போன்றவற்றிலும் பங்கேற்றார் விஜய்.

சென்னை மாநகரில் ஈரத்ததானம் வழங்கிய 370 பேருக்கும் நற்பணிகள் செய்த 40 பேருக்கும் சான்றிதழ், புகைப்படங்களை இன்று மாலை 6 மணிக்கு ஷோபா மண்டபத்தில் வழங்குகிறார் விஜய்.

இதேபோன்ற நற்பணி நிகழ்ச்சிகள் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றன.

பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தலைமை விஜய் நற்பணி இயக்க தலைவர் சி.ஜெயசீலன், துணைத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரவிராஜா, துணைச்செயலாளர் ஐ.சி.குமார், மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Viajy Birthday Celebrations







Vijay Birthday Celebrations 7







Vijay Birthday Celebrations 6







Vijay Birthday Celebrations 5







Vijay Birthday Celebrations 4







Vijay Birthday Celebrations 3







Vijay Birthday Celebrations 2







Viajy Birthday Celebrations






மாறப்போகும் விஜய்யின் இமேஜ்!

தாணு தயாரிக்கும் படத்தை சீமான் இயக்கப் போகிறார் என்றும், அதில் விஜய்தான் ஹீரோ என்றும் நாம் எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டன. படத்திற்கு பகலவன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் விஜய்யின் கேரக்டர் என்ன என்பது லேசாக கசிந்திருக்கிறது. அந்த முக்கியமான கேரக்டர் என்ன தெரியுமா? டாக்டர். ஈழத்திலிரு...க்கிற முகாமில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு வைத்தியம் பார்க்கிற மருத்துவராக நடிக்கிறாராம் விஜய். அங்கு அவருக்கு ஏற்படுகிற காதல் உப கதையாக சொல்லப்பட்டாலும், ஈழ பிரச்சனையை உணர்ச்சி பூர்வமாக விவாதிக்கிற வசனங்கள் அவருடைய இமேஜை எங்கேயோ உயர்த்திக் கொண்டு போகும் என்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி-விஜய்

நடிகர் விஜய் இன்று தனது 37வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி ஏராளமான ஏழை மாணவ மாணவியருக்கு கல்வி உதவிகளை வழங்கினார். டீக்கடையில் இரவில் வேலை செய்து கொண்டே பகலில் மாநகராட்சிப் பள்ளியில் படித்து 1200க்கு 1130 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பாண்டியராஜ் எனும் ம...ாணவரைப் பற்றிக் கேள்விப்பட்ட விஜய், அவரை இன்று நேரில் வரவழைத்தார். அந்த மாணவர் என்ன படிக்க விரும்புகிறார் எனக்கேட்டு அதற்கான முழுச் செலவையும் ஏற்பதாக அறிவித்தார்.
மேலும் விஜய் உதவியுடன் கம்ப்யூட்டர் கல்வி படித்து தேர்ச்சி பெற்ற 37 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். உறுப்பு தானம் வழங்கிய 37 பேருக்கு சான்றிதழ்களும், 37 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கினார். இதே போல தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களைத் தத்தெடுத்துள்ள நடிகர் விஜய், அவர்களது கல்விக்கான அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று படிக்க வைக்கிறார். விஜய்யின் மேலாளரும் மக்கள் தொடர்பாளருமான பிடி செல்வகுமார் இப்பொறுப்பை நேரடியாகக் கவனித்து வருகிறார். மாவட்டம்தோறும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களையும் விஜய் ரசிகர் மன்றங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று விஜய் பிறந்த நாளையொட்டி காலை 9 மணிக்கு பாலவாக்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் விஜய் முன்னிலையில் ரசிகர்கள் நூறு பேர் ரத்த தானம் வழங்கினர். காலை 9.30 மணிக்கு திருவான்மியூர் தியாகராஜர் தியேட்டர் எதிரிலுள்ள முத்துலட்சுமி மருத்துவமனையில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார். காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே ஊள்ள நகராட்சி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தார்.
காலை 11 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள அவரது ஷோபா திருமண மண்டபத்தில் அனாதை இல்ல குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கினார். மேலும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று நடந்து வருவதாக விஜய் தெரிவித்தார். பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தலைமை விஜய் நற்பணி இயக்க தலைவர் சி.ஜெயசீலன், துணைத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரவிராஜா, துணைச்செயலாளர் ஐ.சி.குமார், மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

எதிர்பார்ப்பைக் கிளப்பும் பகலவன்

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் இளைய தளபதி விஜய் அசத்திய சச்சினுக்குப் பின் மீண்டும் ஒரு முறை தாணு -விஜய் கூட்டணியில் பகலவன் வர இருப்பதை நாமறிவோம்.

தம்பிக்குப் பின் இயக்கத்துக்கு நீண்ட ஓய்வு விட்டிருந்த சீமான் மீண்டும் களமிறங்கத் தயாராகிவிட்டார். சீமான் பிரபாகரனைச் சந்தித்தபோது தம் மனதிலிருந்த இரண்டு கதையை அவரிடம் பகிர்ந்து கொண்டாராம்.

அவற்றில் ஒன்றுதான் பகலவனின் கதை. படப்பிடிப்பு தொடங்குமுன்னே ஏக எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது இந்தப் படம். இயக்குநர் ஜெகன்ஜி இயக்கத்தில் நடித்து வரும் சீமான் அந்தப் படம் முடிந்த கையோடு பகலவனைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுகள்

தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் காதலுக்கு மரியாதை படத்துக்காக 1997ஆம் ஆண்டு பெற்றுள்ளார். தமிழக அரசு 1998 ஆம் ஆண்டு விஜய்க்கு கலைமாமணி விருது அளித்து கௌரவித்துள்ளது. விஜய் 2004ஆம் ஆண்டு கில்லி படத்துக்காக தினகரன் வழங்கிய சிறந்த நடிகர் விருதையும், அதே படத்துக்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் டுடே வழங்கிய சிறந்த நடிகர் விருதையும் பெற்றுள்ளார். கில்லி படத்துக்காக மெட்ராஸ் கார்பொரேட் கிளப் வழங்கிய சிறந்த நடிகர் விருதையும் விஜய் பெற்றுள்ளார்

இளைய தளபதி விஜய்


நடிகர் விஜய் 1974ஆம் ஆண்டு ஜுன் 22ஆம் நாள் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். இவர் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் ஆவார். இவரின் தாயார் ஷோபா ஒரு பின்னணி பாடகர் ஆவார். விஜய்யின் சகோதரி வித்யா தமது இரண்டாவது வயதிலே காலமானார். விஜய் லொயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன்ஸ் படித்தார். விஜய் இலங்கையைத் தமிழரான சங்கிதாவை 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் நாள் மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முதல் மகன் ஜேசன் சஞ்சய் 2000ஆம் ஆண்டு ஆகஸ்டு 26ல் லண்டனில் பிறதார். இரண்டாவது மகள் திவ்யா சாஷா 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் நாள் பிறந்தார்.